உரிய ஆவணங்கள் இல்லை – நகருக்குள் சுற்றிவந்த சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.9,80,000 அபராதம்

Default Image

உரிய ஆவணங்கள் இன்றி நகருக்குள் சுற்றிவந்த சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.9,80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் போக்குவரத்து  காவல்த்துறையினர்  சோதனை மேற்கொண்டனர்.அப்பொழுது சந்தை மதிப்பில் சுமார் 2 கோடி மதிப்பிலான  Porsche 911 என்ற சொகுசு காரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.அப்பொழுது அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


இது தொடர்பாக அகமதாபாத் போக்குவரத்து  காவல்த்துறை துணை ஆணையர் அஜித் ரஞ்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், உரிய ஆவணங்கள் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் சுற்றிவந்த Porsche 911 என்ற சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.சம்பவ இடத்தில் இந்த காருக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.இதனால் காரை போக்குவரத்து வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தோம்.அவர் மேற்கொண்ட ஆய்வில் ,காருக்கு  இன்சூரன்ஸ் எதுவும் செய்யப்படவில்லை மற்றும் சாலை வரியும் கட்டவில்லை என்று கூறியதாக  தெரிவித்தார்.மேலும் இதன் உரிமையாளர் அபராதத் தொகை கட்டியதும் கார் அவரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த காரின் உரிமையாளருக்கு ரூ.9,80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்