பிரபல மலையாள நடிகை கார் விபத்தில் படுகாயம்..!

Default Image

பிரபல மலையாள நடிகை மேகா மேத்யூ படுகாயமடைந்தார். சுமார் ஒரு மணி நேரம் காருக்குள்ளேயே கிடந்துள்ளார்.மலையாள சினிமாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஆனந்தம் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மேகா மேத்யூ. பின்னர் இவர் ஒரு மெக்சிக்கன் அபாரத என்ற படத்தில் நடித்தார்.

Image result for மேகா மேத்யூ.தற்போது மோகன்லாலுடன் நீராளி, ஆசிப் அலியுடன் மந்தாரம் மற்றும் லியான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.மேகா நேற்று காலை தனது அண்ணன் திருமண நிச்சயதார்த்தத்திற்காக காரில் கோட்டயம் புறப்பட்டார். காரை அவரே ஓட்டி ெசன்றார். அப்போது கனமழை பெய்து கெண்டிருந்தது.

எர்ணாகுளம் அருகே முளம் துருத்தி பகுதியில் ெசன்றபோது எதிரே வந்த கார் மீது இவரது கார் மோதியது. மோதிய வேகத்தில் இவரது கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த மேகா மேத்யூ காருக்குள் சிக்கிக்கொண்டார்.

மோதிய கார் நிற்காமல் சென்றுவிட்டது.காருக்குள் சிக்கியவர் இறந்திருக்கலாம் என்று கருதி யாரும் கார் அருகே செல்லவில்லை. இதையடுத்து சிலர் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் ஆம்புலன்சும் வரவில்லை. அப்போது அங்கு வந்த ஒரு புகைப்பட கலைஞர் காரில் சிக்கியது மேகா மேத்யூ என்று அடையாளம் கண்டார். பின்னர் அந்த பகுதியினருடன் இணைந்து காரை நிமிர்த்தி அவரை மீட்டார். படுகாயமடைந்திருந்த மேகா மேத்யூவிற்கு கொச்சி தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்