மைசூரு பல்கலைக்கழகத்தில் பயின்ற பாடங்களில் அதிக அளவு மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மைசூரு பல்கலைக்கழகத்தில் தற்போது 101 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பட்டங்களை வழங்கியுள்ளார். இந்த பல்கலைக்கழகத்தில் படித்த சைத்ரா நாராயண் என்ற மாணவி பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை அடைந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் உத்தரகண்டா மாவட்டத்தில் உள்ள சிர்சி என்ற பகுதிக்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் சைத்ரா நாராயண். இவரது கிராமத்திற்கு மொத்தமாகவே இரண்டு பேருந்துகள் மட்டுமே வருகிறது. காலை ஒன்றும் மாலை ஒன்றும் வருகிறது. இந்த பேருந்தை பயன்படுத்தி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்த மாணவி மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.
இந்நிலையில் இவர் அந்த பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை வேதியியல் பட்ட படிப்பை படித்தார். பாடங்களில் சிறந்த தேர்ச்சி பெற்றதன் காரணத்தால் இந்த மாணவிக்கு 20 தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனையால் பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…