காந்தி படம் அவமதிப்பு…இந்து மகாசபையை சேர்ந்த பூஜா பாண்டே கணவர் கைது…!!
காந்தி படத்தை துப்பாக்கியால் சுடுவது போல் போட்டோ எடுத்த இந்து மகாசபையை சேர்ந்த பூஜா பாண்டே, கணவர் அசோக் பாண்டே கைது
கடந்த ஜனவரி மாதம் 30_ஆம் தேதி மஹாத்மா காந்தியின் நினைவு நாள் இந்திய முழுவதும் அனுசரிக்கப்பட்டது.டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்தும் , மாலை அனுவித்தும் , உறுதி மொழி எடுத்தும் அனுசரித்தனர் .
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்து மகாசபையை சேர்ந்த பூஜா பாண்டே காந்தி படத்தை துப்பாக்கியால் சுடுவது போல் போட்டோ எடுத்தார்.இந்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.மேலும் இவரின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் , கண்டனமும் எழுந்தது.
இதையடுத்து அரசியல் கட்சியினர் , சமூக ஆர்வலர்கள் இவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது இந்நிலையில் இந்து மகாசபையை சேர்ந்த பூஜா பாண்டே_வின் கணவர் அசோக் பாண்டே_வை போலீசார் கைது செய்துள்ளனர்.