திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் மூன்று வயதான வெள்ளை நிறம் கொண்ட பொமேரியன் நாய் ஒன்று சாலையில் இங்கும் அங்கும் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது.இதை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன் அந்த பொமேரியன் நாயை மீட்டார்.
அப்போது அவருக்கு அதிர்ச்சியான செய்தி ஓன்று காத்து இருந்தது.அந்த நாயின் கழுத்தில் ஒரு தூண்டு தாளில் ஒரு சில வார்த்தைகள் மலையாளத்தில் எழுதப்பட்டு இருந்தது.அந்த தாளில் “இந்த நாய் நன்றாக பழகும் , அதிக உணவு சாப்பிடும் அதிகமாக பால், பிஸ்கட், முட்டை போன்றவர்களை விரும்பி சாப்பிடும்.
ஐந்து நாளைக்கு ஒருமுறை குளிக்கும். இந்த நாயிடம் எந்த விதமான நோயும் இல்லை. இதுவரை இந்த நாய் யாரையும் கடித்ததில்லை. இந்த நாய் பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் இதை அனாதையாக விடப்படுகிறது” என எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன் கூறுகையில் ,பொதுவாக நாய் அடிபட்டு இருந்தாலோ , நோய் இருந்தாலோ அந்த நாயின் உரிமையாளர்கள் அனாதையாக விட்டு விடுவார்கள்.ஆனால் கள்ளத்தொடர்பை காரணமாக வைத்து நாயை அனாதையாக விடப்பட்டது இதுவே முதல் முறை என கூறினார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…