பல்வேறு போராட்டம் நடந்து வரும் நிலையிலும் அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம்.. உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு…
- நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
- உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு.
பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார். எனவே இந்த சட்டம் நடைமுறைக்கு வருவது ஒன்றுதான் எஞ்சியிருந்து, அதற்க்கும் குறைவில்லாமல் இன்று முதல் இந்த குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வரும் நிலையிலும் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது குறித்து எதிர்கட்சிகள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.