தனிப்பெரும்பான்மையா.? தொங்கு சபையா.? கர்நாடக தேர்தல் கருத்து கணிப்புகள் முழு விவரம்… பாஜக vs காங்கிரஸ்.!

BJP CONGRESS

தனியார் செய்தி நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது என கூறுகின்றன. 

கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு துவங்க உள்ளது. மொத்தம் 36 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை பணிகள் துவங்க உள்ளன. விதிகளின் படி, தேர்தலுக்கு பிறகு பல்வேறு செய்தி நிறுவனங்கள் தாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ரிபப்ளிக் பத்திரிகை (REPUBLIC) :

பாஜக 85-100  இடங்களிலும், காங்கிரஸ் 94 -108 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 24-32 இடங்களிலும், பிற கட்சிகள் 2-6 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா  டுடே (INDIA TODAY) :

பாஜக 62-80  இடங்களிலும், காங்கிரஸ் 122-140 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 20-25 இடங்களிலும், பிற கட்சிகள் 3  இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

டிவி 9 (TV9) : 

பாஜக 88-98  இடங்களிலும், காங்கிரஸ் 99-109 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 21-26 இடங்களிலும், பிற கட்சிகள் 4 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

ABP பத்திரிகை நிறுவனம் :

பாஜக 83-95  இடங்களிலும், காங்கிரஸ் 100-112 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 21-29 இடங்களிலும், பிற கட்சிகள் 2-6 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் (ASIANET) :

பாஜக 94-117  இடங்களிலும், காங்கிரஸ் 91-106 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம்14-24 இடங்களிலும், பிற கட்சிகள் 2 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜீ செய்தி நிறுவனம் (ZEE NEWS) : 

பாஜக 79-94  இடங்களிலும், காங்கிரஸ் 103-118 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 25-33 இடங்களிலும், பிற கட்சிகள் 2-5 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் (TIMES NOW) :

பாஜக 114  இடங்களிலும், காங்கிரஸ் 86 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 21 இடங்களிலும், பிற கட்சிகள் 3 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting
upi gst over 2000
Actor Bobby Simha car accident