21 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்! எந்த மாநிலத்தில் அதிக வாக்கு சதவீதம் அதிகம்?

Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம்.
18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. மொத்தம் 543 மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த சூழலில் நேற்று காலை 7 மணி மணி முதல் மாலை 6 மணி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பீகார் 4 , சத்தீஸ்கர் 1, மத்திய பிரதேசம் 6, மகாராஷ்டிரா 5, மணிப்பூர் 2, மேகாலயா 2, மிசோரம் 1 இடம், நாகாலாந்து 1 தொகுதிகளும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதேபோல், ராஜஸ்தான் 12, சிக்கிம் 1, தமிழ்நாடு 39, திரிபுரா 1, உத்தரபிரதேசம் 8, உத்தரகாண்ட் 5, மேற்குவங்கம் 3, அந்தமான் மற்றும் நிக்கோபார், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி என தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 2 லட்சம் வாக்குச் சாவடிகளில் அமைக்கப்பட்டது.
ஒரு சில பகுதிகளில் மோதல் போக்கு நிலவினாலும் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு சுமுகமாக நேற்று நிறைவு பெற்றது. இந்த நிலையில், 21 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நேற்று 7 மணி நிலவரப்படி சராசரியாக 60% வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு சதவீத நிலவரம்:
- அந்தமான் & நிக்கோபார் – 56.87%
- அருணாச்சல பிரதேசம் – 65.46%
- அசாம் – 71.38%
- பீகார் – 47.49%
- சத்தீஸ்கர் – 63.41%
- ஜம்மு & காஷ்மீர் – 65.08%
- லட்சத்தீவு – 59.02%
- மத்திய பிரதேசம் – 63.33%
- மகாராஷ்டிரா – 55.29%
- மணிப்பூர் – 68.62%
- மேகாலயா – 70.26%
- மிசோரம் – 54.18%
- நாகாலாந்து – 56.76%
- புதுச்சேரி – 73.25%
- ராஜஸ்தான் – 50.95%
- சிக்கிம் – 68.06%
- தமிழ்நாடு – 69.46%
- திரிபுரா – 79.90%
- உத்தரப்பிரதேசம் – 57.61%
- உத்தரகாண்ட் – 53.64%
- மேற்கு வங்காளம் – 77.57%
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025