மக்களவை தேர்தல் – 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

Polling status

Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல்.

மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி நடைபெறுகிறது. வாக்களிக்க தகுதியுடையவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இதில் சில மாநிலங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவும், சில இடங்களில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, தற்போது 13 மாநிலங்களில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 11 மணி நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் 36.42% வாக்குகள் பதிவாகி உள்ளது என்றும் குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 18.83 வாக்குகள் பதிவாகி உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று மற்ற மாநிலங்களில் 11 மணி நிலவரப்படி, அசாம் 27.43%, பீகார் 21.68% வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும், சத்தீஸ்கர் 35.47%, ஜம்மு மற்றும் காஷ்மீர் 26.61%, கர்நாடகா 22.34%, கேரளா 25.61%, மத்தியப் பிரதேசம் 28.15%, மணிப்பூர் 33.22%, ராஜஸ்தான் 26.84%, உத்தரப் பிரதேசம் 24.31%, மேற்கு வங்காளம் 31.25% வாக்குகள் பதிவாகியுள்ளது எனவும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்