TRIPURA ELECTION2023:திரிபுரா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடக்கம்.!
திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநில சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு பணிகளை கண்காணிக்க 400 மத்திய ஆயுதம் தாங்கிய துணை ராணுவப் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வடகிழக்கு மாநில திரிபுரா தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி), இடது-காங்கிரஸ் கூட்டணி மற்றும் மாநிலத்தின் புதிய பிராந்தியக் கட்சியான டிப்ரா(TIPRA) மூன்று கட்சிகள் பெரும்பான்மையாக போட்டியிடுகின்றன. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, மார்ச் 2ஆம் தேதி நடைபெறுகிறது.