அவர் இவ்விழாவில் பேசியதாவது, இந்தியா, சர்வதேச பிரச்னைகளில் வணிக ஆதாயம் உள்ளதா இல்லையா என ஆராய்ந்து, அதற்கேற்ப தன் முடிவுகளை எடுக்காது. அதுபோல, எந்த விவகாரமாக இருந்தாலும் அதில் தலையிட்டு இடையூறு விளைவிக்காது. அதே நேரத்தில், பிரச்னைகளை தள்ளி நின்று என்றுமே வேடிக்கையும் பார்க்காது. அவற்றுக்கு தீர்வு காண முற்படும் என்றார். மேலும் கூறிய அவர், எந்த ஒரு பிரச்னையிலும், இந்தியா தன் முடிவை, உறுதியாக தெரிவிக்கும். இதற்கு, உதாரணமாக பருவநிலை மாற்றம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை கூறலாம் என்றார்.மேலும் கூறிய அவர், இந்தியா-சீனா இவற்றிற்க்கு இடையேயான நல்லுறவில், இரு நாடுகளும் பரஸ்பரம் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பில்லை. இரு நாடுகளின் உறவு என்பது மிகவும் தனித்துவமானது. அதுபோல, உலகின் ஒவ்வொரு நாடும் இருக்க வேண்டும். இரு நாடுகளின் உறவில், ஏற்ற, இறக்கமற்ற நிலை அமைய வேண்டும். இதே போல் இந்தியா- அமெரிக்கா நாடுகள், இணைந்து செயல்படாத துறையே இல்லை எனலாம். உலக நாடுகளுக்கு, பொதுவான சவால்கள் பல உள்ளன.அவற்றுள், பயங்கரவாதம், பிரிவினை, குடிபெயர்வு உள்ளிட்டவற்றை கூறலாம். இவற்றை எப்படி கையாள வேண்டும் என்பதை, உலக நாடுகள், தங்களுக்குள் கருத்துக்களை கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இந்த அதிரடியான கருத்து இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…