சர்வதேச பிரட்சனைகளை இந்தியா ஒன்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.. அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி பேச்சு…

Default Image
  • தலைநகர் டெல்லியில் நடைபெற்ற, பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவு துறை அமைச்சர் அதிரடியான பல கருத்துக்களை முன்வைத்தார்.
  • இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கிய அமைச்சர் ஜெய்சங்கர்.

அவர் இவ்விழாவில்  பேசியதாவது,   இந்தியா, சர்வதேச பிரச்னைகளில் வணிக ஆதாயம் உள்ளதா இல்லையா என ஆராய்ந்து, அதற்கேற்ப தன் முடிவுகளை எடுக்காது. அதுபோல, எந்த விவகாரமாக இருந்தாலும் அதில் தலையிட்டு இடையூறு விளைவிக்காது. அதே நேரத்தில், பிரச்னைகளை  தள்ளி நின்று என்றுமே வேடிக்கையும் பார்க்காது. அவற்றுக்கு தீர்வு காண முற்படும் என்றார். மேலும் கூறிய அவர்,  எந்த ஒரு பிரச்னையிலும், இந்தியா  தன் முடிவை,  உறுதியாக தெரிவிக்கும். இதற்கு, உதாரணமாக பருவநிலை மாற்றம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை கூறலாம் என்றார்.மேலும் கூறிய அவர்,  இந்தியா-சீனா இவற்றிற்க்கு இடையேயான நல்லுறவில், இரு நாடுகளும் பரஸ்பரம் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பில்லை. இரு நாடுகளின்  உறவு என்பது மிகவும் தனித்துவமானது. அதுபோல, உலகின் ஒவ்வொரு நாடும் இருக்க வேண்டும். இரு நாடுகளின் உறவில், ஏற்ற, இறக்கமற்ற நிலை அமைய வேண்டும். இதே போல் இந்தியா- அமெரிக்கா நாடுகள், இணைந்து செயல்படாத துறையே இல்லை எனலாம். உலக நாடுகளுக்கு, பொதுவான சவால்கள் பல உள்ளன.அவற்றுள், பயங்கரவாதம், பிரிவினை, குடிபெயர்வு உள்ளிட்டவற்றை கூறலாம். இவற்றை எப்படி கையாள வேண்டும் என்பதை, உலக நாடுகள், தங்களுக்குள் கருத்துக்களை கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இந்த அதிரடியான கருத்து இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்