இந்தியா மீது மலேசியா கடுமையான விமர்சனம்.. இறக்குமதியில் கையை வைத்து அதிரடி காட்டிய இந்தியா.. அதிர்ந்து போன மலேசியா…

Default Image
  • அண்மையில் காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக  மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
  • மலேசிய இறக்குமதிப்பொருள்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதித்து அதிரடி.
இந்த விமர்சனத்திற்க்கு  இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் எண்ணெய் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மத்திய அரசு  கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த இறக்குமதி தடையால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாமாயில் 2.8 சதவீதமாக உள்ளது. இதே போல் மலேசியாவின் மொத்த ஏற்றுமதியில் 4.5 சதவீதம் பாமாயில்  உள்ளது. அதாவது, மலேசியா ஒரு வருடத்தில் 19 மில்லியன் டன் பாமாயிலை உற்பத்தி செய்கிறது, இந்தியாவின் இந்த கட்டுப்பாடுகள் மலேசியாவை கடுமையாக பாதிப்படைய வைத்துள்ளது. இதுகுறித்து, கடந்த செவ்வாயன்று மலேசிய பிரதமர்  மகாதீர் முகமது மலேசிய ஊடகங்களில் கூறும் போது, இந்தியாவின் இந்த கட்டுப்பாடுகளால்  நாங்கள் நிச்சயமாக கவலைப்படுகிறோம்,
Image result for malaysia pm
ஏனென்றால் நாங்கள் நிறைய பாமாயிலை இந்தியாவுக்கு விற்கிறோம், ஆனால் மறுபுறம், நாங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும், ஏதாவது தவறு நடந்தால் அதை நாங்கள் உலகுக்கு  சொல்ல வேண்டும். உண்மை என்னவென்றால், இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது அங்குள்ள மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மற்றவர்களிடம் பாகுபாடு காண்பது என்பது  தவறு என்று முழு உலகமும் உணர்கிறது என கூறினார். இதைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான பாமாயில் மட்டுமின்றி, மேலும்  வர்த்தக கட்டுப்பாடுகளையும்  கடுமையாக்க இந்தியா  முயன்று வருகிறது. இதில், நுண்செயலிகளுக்கு தொழில்நுட்ப தரங்களை விதிக்கவும் மேலும் தொலைத் தொடர்பு சாதனங்களுக்கான தரக் கட்டுப்பாட்டு உத்தரவையும்  அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த அடுத்தடுத்த கட்டுப்பாடுகளால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது மலேசிய அரசு. இந்த விவகாரம் இந்திய அரசியலில் மட்டுமின்றி உலக நாடுகளையே இந்தியவை உற்றுநோக்க வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Minister Sekarbabu
Priyanka Gandhi
AUS vs IND , KL Rahul - Jaiswal
amaran ott
Congress - TMC - BJP
Annamalai (14) (1)