கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசியலமைப்பைக் காப்போம் என்ற தலைப்பில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேரணிக்கு அசாதுதீன் ஒவைஸிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் அவர் கலந்து கொண்டு மேடையில் ஒவைஸி மேடை ஏறியதும் திடீரென ஒரு பெண் மேடையில் ஏறி மைக்கில் ‘பாகிஸ்தான் வாழ்க’ ‘பாகிஸ்தான் வாழ்க; என்ற முழக்கத்தை எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தினார்.இதனால், மேடையில் இருந்த ஒவைஸி செய்வதறியாத திகைத்து அந்தப் பெண்ணின் கையில் இருந்த மைக்கை வாங்க முயற்சித்தார். இதையடுத்து, காவல் துறையினர் மேடையேறி அவரை மேடையிலிருந்து கீழே இறக்கினர். இதன்பின் பேசிய ஒவைஸி, “அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் மற்றும் என்னுடையக் கட்சிக்கோ எந்தத் தொடர்பும் இல்லை.இந்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அவரை இங்கு அழைத்திருக்கக் கூடாது. இது தெரிந்திருந்தால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். நாங்கள் இந்தியாவுக்காக இருக்கிறோம். எதிரி நாடான பாகிஸ்தானை எந்தவிதத்திலும் ஆதரிக்க மாட்டோம். எங்களுடைய ஒட்டுமொத்த பயணமே இந்தியாவைப் பாதுகாப்பதுதான்” என்றார். இந்த விவகாரம் இந்திய மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…