கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனும்… I.N.D.I.A அரசியல் தலைவர்களின் வரவேற்பும்…

Delhi CM Arvind Kejriwal

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு வரவேற்பு தெரிவித்து I.N.D.I.A கூட்டணி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் இருந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜூன் 1 வரையில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நேற்று மாலை திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

இடைக்கால ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் , ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மட்டுமின்றி I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்களும் நேற்று முதல் தங்கள் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

திமுக :

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது என பதிவிட்டு இருந்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் :

அதே போல, I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன், நீதியை அடையாளப்படுத்துகிறது. மேலும், நமது I.N.D.I.A கூட்டமைப்பை பலப்படுத்துகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நமது வேகத்தை அதிகப்படுத்துகிறது என குறிப்பிட்டார் மம்தா.

தேசியவாத காங்கிரஸ் :

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் உத்தரவை நான் வரவேற்கிறேன். ஜனநாயகத்தை காப்பதில் I.N.D.I.A கூட்டணி உறுதியாக உள்ளது என்று பதிவிட்டார்.

சமாஜ்வாடி :

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்பதிவிடுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உண்மைக்கு கிடைத்த மற்றொரு வெற்றியாகும். I.N.D.I.A  கூட்டணியின் வலிமையும் ஒற்றுமையும் பாஜகவின் ஆட்சியில் இருந்து இந்திய மக்களை விடுவிக்கப் போகிறது. மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்க உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா :

I.N.D.I.A கூட்டணையில் அங்கம் வகிக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில்,  அண்ணல் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடு இயங்கிறது என்பதை சர்வாதிகார சக்திகளுக்குக் காட்ட வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டு இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 03032025
India vs Australia - 1st Semi-Final
KKR captain Ajinkya Rahane
mkstalin
Heavy rains
Narendra Modi lion
mk stalin about all party meeting