ரத்தன் டாடா மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து உள்ளார்கள்.

Ratan Tata passed away

மும்பை: மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா (86) உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர், 2012-ல் ஒய்வு பெற்றார்.

பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உலக அரங்கில் திறமையான தொழிலதிபராகவும் திகழ்ந்த ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்பொழுது, ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மேலும், மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ மையத்தில், ரத்தன் டாடா உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து உள்ளார்கள்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா(86) மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது x பதிவில், “தொலைநோக்குப் பார்வையுள்ள தொழிலதிபரும், பழமையான மதிப்பு வாய்ந்த நிறுவங்களின் தலைவராக விளங்கினார். பணிவு, இரக்கம், அர்பணிப்பு காரணமாக அனைவராலும் நேசிக்கப்பட்டவர்” என அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய தொழில்துறையின் உண்மையான பேராளுமை ரத்தன் டாடா மறைவெய்திய செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரின் தொலைநோக்குப்பார்வை டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இழப்பின் இந்த ஆழ்ந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தன்னுடைய தொழில் நேர்மையினாலும், வள்ளல் தன்மையாலும், சமூக சேவையாலும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த பாரம்பரிய தொழிலதிபரான ரத்தன் டாடா அவர்களின் மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பாகும். மறைந்த ரத்தன் டாடா அவர்தம் குடும்பத்தாருக்கும், டாடா நிறுவனத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ” இந்தியாவின் புகழ்பெற்ற டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும், வணிகத்தில் அறத்தைக் கடைபிடித்தவருமான ரத்தன் டாட்டா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இந்தியத் தொழில்துறையில் அறம் என்றால் ரத்தன் டாட்டாவின் பெயர் தான் நினைவுக்கு வரும் என்ற அளவுக்கு வரலாற்றில் அவரது பெயர் நிலைத்து நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், “டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவருமான திரு.ரத்தன் டாடா அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.  டாடா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன்

மநீம தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ரத்தன் டாடா ஜி என்னுடைய தனிப்பட்ட ஹீரோ, என் வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்ற முயற்சித்தவர். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அதன் பங்களிப்புகள் என்றென்றும் நவீன இந்தியாவின் கதையில் பொறிக்கப்படும் ஒரு தேசிய பொக்கிஷம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், டாடா குழுமம் மற்றும் எனது சக இந்தியர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்