கோவில் வளாகத்தில் ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் காவலர்!
கோவில் வளாகத்தில் ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் காவலர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், அனைத்து பள்ளி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லி காவல்துறை கான்ஸ்டபிள் தான்சிங், டெல்லி செங்கோட்டையில் அருகில் உள்ள கோவில் வளாகத்தில் வைத்து, தினமும் அப்பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கொரோனா தொற்று ஆரம்பித்து பள்ளிகள் மூடப்பட்டதிலிருந்தே, நான் இந்த வகுப்பை நடத்தி வருகிறேன். இந்த குழந்தைகளால் ஆன்லைன் வகுப்பில் கலந்து இயலாது. அவர்கள் படிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஏன்னென்றால், அவர்கள் படித்தால்தான் மோசமான செயல்கள் மற்றும் கூட்டு குற்றத்தில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்.’ என தெரிவித்துள்ளார்.