கொல்கத்தாவில் பேருந்து விபத்தால் காவலர் ஒருவர் உயிரிழப்பு..!-13 பேர் பலத்த காயம்..!

கொல்கத்தாவில் நடந்த பேருந்து விபத்தில் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 13 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
கொல்கத்தாவில் பிற்பகல் 12.30 மணியளவில் வில்லியம்கோட்டை அருகில் பேருந்து சென்றுகொண்டிருந்த பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் பேருந்து ஹௌராவிலிருந்து மெட்டியாரூப்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது வில்லியம்கோட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து, நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் மீது இடித்து தள்ளிக்கொண்டு வில்லியம் கோட்டை சுவற்றில் மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர் கொல்கத்தா காவல் ரிசர்வ் படையை சேர்ந்த விவேகானந்த் தாப். இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 13 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் 4 பேர் மிக மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கொல்கத்தா காவல் ஆணையர் சௌமென் மித்ரா நேரடியாக விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025