என்ன தைரியம் டி உனக்கு!?தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவி.!கணவர் சரமாரி தாக்கு.!
மத்திய பிரதேச மாநிலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் தனது மனைவியை தரதரவென இழுத்துசென்று பொது இடத்தில் தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தில் கண்ட்வானி காவல்நிலைய அதிகாரியாக பணியாற்றுபவர் நரேந்திரா.இவர்வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவனின் இந்த செயலை கண்டித்த அவருடைய மனைவிக்கும்-காவலர்க்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரம் மனைவி கண்டித்ததால் ஆத்திரமடைந்த காவலர் வீட்டில் இருந்து தன் மனைவியின் தலைமுடியை பிடித்து தரதரவென சாலைக்கு இழுத்துச் சென்று எல்லோரும் பார்க்கும் விதமாக சரமாரியாக தாக்கி உள்ளார். அப்போது அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.இது தற்போது வைரலாகி வருகிறது.இந்நிலையில் கொடூரமாக தாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரி மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.