வாட்ஸ்அப் மூலம் பெண்ணை துன்புறுத்தி வந்த காவலர் கைது.!
ஹைதராபாத்தில் பெண் ஒருவரை வாட்ஸ்அப் மூலம் துன்புறுத்தி வந்த கான்ஸ்டபிள் ஒருவரை பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள புஞ்சகுட்டா காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் வீரபாபு. இவர் முதல்வர் முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியாளராகவும் பணியாற்றியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் முதல்வர் முகாம் அலுவலகம் வரை செல்வதற்கு வீரபாபுவிற்கு லிப்ட் கொடுத்துள்ளார். அப்போது பெண்ணின் மொபைல் நம்பரை எடுத்து கொண்ட வீரபாபு, அதனையடுத்து தினமும் மெசேஜ்களையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் வாட்ஸ்-அப்பில் அந்த பெண்ணிற்கு அனுப்பி துன்புறுத்தி உள்ளார்.
அந்த பெண்ணும் பலமுறை தன்னை துன்புறுத்தல் செய்யாதீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனாலும் தொடர்ந்து வீரபாபு பல மெசேஜ்களை அனுப்பியுள்ளார். இதனை சகிக்க முடியாமல் அந்த பெண் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் வீரபாபு மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாரா ஹில்ஸ் போலீசாரால் வீரபாபு கைது செய்யப்பட்டார்.