ராணுவ ஆயுதத்தை பயன்படுத்தும் போலீசார் – விவசாய சங்க தலைவர்..!
விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணியாக செல்வதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் விவசாயிகள் டெல்லி நோக்கி செல்கின்றனர். அவர்களை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களையும் வீசினர்.இதில் சில விவசாயிகள் காயம் அடைந்தனர்.
போலீசாரின் இந்த செயலால் விவசாயிகள் மத்தியில் கொதிப்பு ஏற்பட்டுள்ளது. ஷம்பு எல்லையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறுகையில்” விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் அரசாங்கத்துடன் மோதுவதற்காக இங்கு வரவில்லை. நாங்கள் இந்த நாட்டின் விவசாயிகள், நீங்கள் ஏற்றுக்கொண்ட MSP உத்தரவாதச் சட்டம், சுவாமிநாதன் கமிஷன் அறிக்கைபடி பயிர் விலையை அமல்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் கூறுகிறோம்.
ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்..!
ஆனால் ட்ரோன்கள் மூலம் எங்களுக்கு எதிராக கண்ணீர் புகை குண்டுவீசப்படுகிறது. எங்களின் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும். போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எதிராக ராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்களை போலீஸார் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் போன்ற சில வெடிமருந்துகளைக் காட்டினார்.
இருப்பினும், இவற்றை இராணுவத்தால் மட்டுமே பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் ஆனால் காவல்துறை பயன்படுத்துகிறார்கள் என்று பாந்தர் குற்றம் சாட்டினார். இது ஒரு ஜனநாயக நாடு என்பதால், டெல்லியில் எங்களை அமைதியாக செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த பாதையை அரசு திறக்க வேண்டும். நாங்கள் விவசாயிகள் , உங்கள் எதிரி அல்ல, எங்களை உங்கள் குடிமக்களாகக் கருதி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறினார்.