காவல் துறையினர் நாய்களை போல தூங்குகிறார்கள் – கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
காவல் துறையினர் நாய்களை போல தூங்குகிறார்கள் என கர்நாடக உள்துறை அமைச்சர் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
மாடுகள் கடத்தப்படுவது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சராக அராகா ஞானேந்திரா அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் மாடுகளை கடத்துபவர்கள் குற்றத்தில் வழக்கமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் அதிகாரிகளுக்கு அது நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு நாய்களைப் போல தூங்குகிறார்கள்.
காவல்துறையினருக்கு சுயமரியாதை தேவை ஒட்டுமொத்த காவல்துறையும் கெட்டுப் போயுள்ளது. நாங்கள் கூலியும் கொடுக்கிறோம். ஆனால் ஊதியத்தில் மட்டும் வாழாமல், லஞ்சத்திலும் வாழ வேண்டும் என விரும்புகிறார்கள் என காவல்துறையினரை கடுமையாக சாடியுள்ளார். இந்த பேச்சு தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.