விடுதியில் காதல் ஜோடிகள்…காக்கும் காவலே அரங்கேற்றிய அநாகரீகமற்ற செயல்!என்ன நடந்தது
புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த காதல் ஜோடிகளை குறிவைத்து பணப்பறிப்பு மற்றும் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்து அத்துமீறலில் ஈடுபட்ட இரண்டு போலீசார்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடந்தது என்ன? சம்பவம் குறித்த சிறப்பு தொகுப்பு இதோ
சுற்றுலா நகரமாக திகழும் புதுச்சேரிக்கு நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமிருந்து தினந்தோறும் ஆயிரகணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவர்.அங்கு பெரும்பாலும் வார இறுதி நாட்களில் காதல் ஜோடிகள் புதுச்சேரியைச் சுற்றி பார்ப்பதற்கு படையெடுப்பது மட்டுமல்லாமல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் இங்கேயே அறை எடுத்து பொழுதை கழிப்பதை வழக்கம் கொண்டு உள்ளனர்.இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று 2 காதல் ஜோடிகள் புதுச்சேரி மாநிலத்தைச் சுற்றி பார்க்கக வந்துள்ளனர். புதுச்சேரியில் பல இடங்களை சுற்றி பார்த்த அந்த ஜோடிகள் அன்றிரவு அருகே உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரண்டு காதல் ஜோடிகள் புதுச்சேரியைச் சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளனர். அவர்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, அன்றிரவு அங்குள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அதே பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் பெரியகடை காவல்நிலைய போலீசார் சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்த நிலையில் காதல் ஜோடிகள் தங்கியிருந்த தங்கும் விடுதிக்கு சென்ற இருவரும் காதலர்கள் தங்கியிருந்த அறைக்கே நேராக சென்று உள்ளனர். அதிர்ச்சி அடைந்த ஜோடிகளிடம் காவலர்கள் இருவரும் நீங்கள் தனிமையில் இருப்பதை வெளியே சொல்லி விடுவோம், வழக்குபதிவு செய்துவிடுவோம் என்று கூறி ஜோடிகளை மிரட்டி உள்ளனர்.இதில் பயந்து போன 2 காதல் ஜோடிகளில் ஒரு காதல் ஜோடி தங்களிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை அப்படியே போலீசாரிடம் கொடுத்துள்ளனர். மற்றொரு ஜோடி தங்களிடம் பணம் இல்லை என்று கூறியதால் காதலர் கண் முன்னே காதலியை காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எங்கே வெளியே சொன்னால் சிக்கலாகிவிடும் என்று அஞ்சி புகார் ஏதும் கொடுக்காமல் அந்த ஜோடிகள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்ட நிலையில் இது குறித்து காவல்துறை தலைமையகத்திற்கு ஒரு புகார் ஒன்று சென்றுள்ளது. அந்த புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு விசாரணையை முடுக்கிவிடப்பட்டுள்ளது.விசாரணையில் நடந்த சம்பவம் உண்மை என்று தெரியவந்ததை அடுத்து காவலர் சதீஷ்குமார், சுரேஷ் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும் காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார்.
ஜோடிகளை மிரட்டி போலீசார் பணம் பறித்ததுடன் அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.