இறந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய் பாக்கெட்டில் இருந்து தற்கொலைக் குறிப்பு கிடைத்ததாக வங்காள காவல்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 454 கி.மீ தூரத்தில் உள்ள வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய் ஒரு கடைக்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் பார்த்த உள்ளூர் வாசிகள் போலீருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ராய் உடலை கைப்பற்றி மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்கில் தொங்கிய இடத்தில் இருந்து அவரது வீடு ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ராய் பாக்கெட்டில் தற்கொலைக் குறிப்பு கிடைத்ததாக வங்காள காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், இறந்தவரின் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு தற்கொலைக் குறிப்பு மீட்கப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கு இரண்டு நபர்கள் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்று போலீசார் தெரிவித்தனர்.
குடும்பத்தை சார்ந்த ஒருவர் கூறுகையில், அதிகாலை 1 மணியளவில் சிலர் வீட்டிற்கு வந்து அவரை அழைத்து சென்றதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் கூறினார். மேலும், எம்.எல்.ஏ. மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று எம்.எல்.ஏ. மருமகன் கிரிஷ் சந்திர ரே கூறினார்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…