கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக ‘தவளை ஜம்ப்’ தண்டனை – மத்திய பிரதேச போலீஸ்
கல்யாணத்திற்கு சென்றவர்களை தவளை ஜம்ப் போட வைத்த காவல்துறை…ஒரே இடத்தில் 300 பேர் கூடியதால் நூதன தண்டனை.
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து பல உயிர்களை பறித்துள்ளது , இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, கொரோனா சூழலை சற்றும் பொருட்படுத்தாத மக்கள் ஆங்காங்கா சுற்றி திரிந்து வருவதால் அவர்களை அடக்கும் பொருட்டு மத்திய பிரதேச காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதனையடுத்து மத்திய பிரதேசம் போபால் பிந்த் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தடையை மீறி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது, திருமணத்தை நடத்த வேண்டாம் என்று அவர்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு (டி.எஸ்.பி) எம்.எல். குஷ்வாஹா தெரிவித்தார்.
ஆனால் அவர்கள் அதையும் மீறி திருமண ஏற்பாடு செய்திருந்தனர்,இந்த தகவல் கிடைத்ததும் பிந்த் நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள உமாரி நகரில் உள்ள திருமணம் நடைபெறும் இடத்தை ஒரு போலீஸ் குழு சோதனை செய்தது, விழாவில் கிட்டத்தட்ட 300 பேர் கூடியிருந்ததாக கண்டறியப்பட்டது.
போலீசாரை பார்த்து தப்பிக்க முயன்ற விருந்தினர் சிலரை சுற்றி வளைத்த காவல்துறை அவர்களை சுமார் 100 மீட்டருக்கு ‘தவளை ஜம்ப்’ செய்யும்படி உத்தரவிட்டனர்.
மேலும் நகரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு முடியும்வரை இதுபோன்ற எந்தவொரு கூட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.