இந்திய வரலாற்றில் முதன்முறையாக காவல்துறையினர் நடத்திய போராட்டம்! என்ன நடக்கிறது டெல்லியில்!?
நவம்பர் 2ஆம் தேதி டெல்லியில் உள்ள திஸ் ஹஸரி நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே வாகனம் நிறுத்தலாவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை வன்முறையில் முடிந்தது. இதனால் காவல்துறையினர் பலருக்கும் , வழக்கறிஞர்கல் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றமானது, காயமடைந்த வழக்கறிஞர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், உச்சநீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், தாக்குதல் ஏற்படுத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து டெல்லி தலைமை காவல் துறை அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் வழக்கறிஞர்களுக்கு எதிராக போராடினர். இந்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என உயர் அதிகாரிகள் சொல்லியும் போராட்டத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் கேட்கவில்லை. இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் நீதி வேண்டும் நீதி வேண்டும் என கோஷமிட்டு போராடி வந்தனர். இந்தியாவில் முதன் முறையாக காவல்துறையினர் போராட்டம் நடத்தியது இதுவே முதல் முறை.