‘ஏட்டம்மாவுடன்’ டூயட் பாட்டிற்கு நடனமாடிய காவல்துறை அதிகாரி-விளக்கம் கேட்டு நோட்டீஸ்..!
- டெல்லியில் போலீஸ் உடையில் டூயட் பாட்டிற்கு இரண்டு காவல் துறையினர் நடனமாடியிருப்பது குறித்து விளக்கம் கேட்டு உயர் அதிகாரி உஷா ரங்கானி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
டெல்லி மாடல் டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக சஷி என்பவரும், அதே காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக விவேக் மாத்தூர் என்பவரும் பணிபுரிகின்றனர். சஷி மற்றும் விவேக் இருவரும் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இருவரும் காவல் நிலையத்தில் பணிபுரியும் நேரத்தில் காவல் உடையோடு ஆடல் பாடல் வீடியோ வெளியிட்டிருப்பது காவல் பணிவிதிகளை மீறிய செயல் என்பதால் இருவருக்கும் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு காவல்துறை அதிகாரி உஷா ரங்கானி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், ‘இருவரும் முகக்கவசம் அணியாமல் கொரோனா விதிமுறைகளை மீறியுள்ளீர்கள். காவல் நிலையத்தில் பணி செய்யும் வேளையில் இருவரும் செய்த செயல் உங்களது பணியில் ஒழுங்கீனமாக கருதப்படுகிறது. கடமைகளை அலட்சியம் செய்துள்ளீர்கள். இது குறித்து நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
Another viral video.. pic.twitter.com/8NeQdFxGp1
— Mahender Singh Manral (@mahendermanral) June 8, 2021