மணிப்பூரில் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொலை..!

மணிப்பூரில் தீவிரவாதிகளால் ஒரு போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

மணிப்பூரின் மோரே நகரில் சிங்தம் ஆனந்த் சப்-டிவிசனல் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை மோரே நகரில் எல்லையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஹெலிபேடை ஆய்வு செய்யச் சென்றார். அப்போது அவர் மீது மர்மநபர்கள் பதுங்கி இருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, மோரேயில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிக்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட  குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முதல்வர் பிரேன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளை கண்டுபிடித்து விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்தார்.

கடந்த மே 3 அன்று பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மைத்தேயி, குக்கி இன மக்கள் இடையிலான இன வன்முறையில் இருந்து மாநிலம் தொடர்ந்து பல சிக்கலை சந்தித்து கொண்டிருக்கும் வேளையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த இன மோதலில் மாநிலத்தில் 200 -க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்