இந்தியாவில் கொரோனவால் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு.!

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காவல் அதிகாரி அனில் கோலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் லூதியானாவில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை கொரோனா தொற்றால் 14,378 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 480 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் அனில் கோலி. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி தற்போது கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். கொரோனாவிற்கு பலியான முதல் காவல் அதிகாரி இவர் தான் என கூறப்படுகிறது.