‘தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால்’ திரைப்பட இயக்குநருக்கு காவல்துறை நோட்டீஸ்..!

மேற்குவங்காளத்தில் ‘தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால்’ திரைப்பட இயக்குனருக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேற்குவங்காளத்தில் சர்ச்சைக்குரிய ‘தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால்’ படத்தின் எழுத்தாளரும் இயக்குனருமான சனோஜ் மிஸ்ராவுக்கு கொல்கத்தா காவல்துறை சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில், இத்திரைப்படத்தின் ட்ரைலர் ஆனது யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, மே 11ம் தேதி வேற்குவங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் வேண்டுமென்றே எடுக்கப்பட்டதாக புகார் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்பின், நடந்த முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து இயக்குனரை விசாரிக்க போதுமான ஆதாரம் இருப்பதாக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனவே, விசாரணைக்காக மே 30ம் தேதி ஆம்ஹெர்ஸ்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சனோஜ் மிஸ்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், மேற்கு வங்க அரசு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.