இன்று நாடு முழுவதும் காவலர் நினைவு தினமானது அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் மோடி போராடுபவர்களை நினைத்து பெருமிதம் அடைவதாக கூறியுள்ளார்.
1959 ஆண்டு அக்21ந்தேதி தேதிலடாக் பகுதியில், சீன ராணுவத்தினரின் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிகாக அர்ப்பணித்தனர்.
காவல் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அந்நாளை காவலர்களின் நினைவு நாளாக ஆண்டுதோறும் நாடு முழுவதும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.
காவலர் நினைவு நாள் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்:
இந்தியா முழுவதும் உள்ள எங்கள் காவல்துறையினர்களுக்கும் அவர்களது
குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
கடமையின் வரிசையில் தியாகம் செய்த அனைத்து காவல்துறையினருக்கும்
நாங்கள் அனைவரும் மரியாதை செலுத்துகிறோம்.அவர்களின் தியாகமும் சேவையும் எப்போதும் நினைவில் இருக்கும்.
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது முதல் கொடூரமான குற்றங்களைத் தீர்ப்பது வரையிலும், பேரழிவு காலக்கட்டத்தில் உதவி செய்வதிலிருந்து, கோவிட் -19 உடன் போராடுவது வரை
எங்கள் காவல்துறையினர் எப்போதும்
தயக்கமின்றி சிறப்பாக செயல்படுகின்றனர்.
இந்திய குடிமக்களுக்கு உதவ அவர்களின் விடாமுயற்சி மற்றும் தயார்நிலை குறித்து பெருமிதம் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.