மேற்கு வங்காளத்தின் பர்த்வான் நகரைச் சேர்ந்த கைலாஷ் தாஸ், இவர் பெங்களூரில் உள்ள ஜே.பி.நகரில் பில்டர் ராஜேஷ் பாபுவின் வீட்டில் ஆறு ஆண்டுகள் வேலை செய்து, அங்கு அடித்தளத்தில் ஒரு குடிசையில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, பாபுவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அக்டோபர் 9-ஆம் தேதி, பாபுவின் குடும்பதினர் கொரோனா நோயாளியை கவனித்துக்கொள்வதில் மும்முரமாக இருந்தபோது, தாஸ் ரூ .1.3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி கொண்டு மைசூருவுக்கு தப்பிச் சென்றதாக தெரிவித்தனர்.
மைசூருவில் உள்ள ஒரு லாட்ஜில் சில நாட்கள் தங்கியிருந்த தாஸ், பின்னர் அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்து மீண்டும் பெங்களூருக்கு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் ஹவுராவுக்கு ரயிலில் ஏறினார் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, ரயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, யாஸ்வந்த்பூரில் தாஸ் ரயிலில் ஏறுவதை அவர்கள் கவனித்தனர். பின்னர், ரயில் ஹவுரா ரயில் நிலையத்தை அடைவதற்குள் தாஸைக் கைது செய்வதற்காக கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் பறக்க போலீசார் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, ஹவுரா ரயில் நிலையத்தில் காவல்துறையினரைக் கவனித்த தாஸ் தப்பிக்க முயன்றார். ஆனால், தாஸை போலீசார் கைது செய்து பாதுகாப்பாக பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டார் என்று அதிகாரி கூறினார்.
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…