ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரியங்கா காந்திக்கு ரூ.6,100 அபராதம் விதித்த போலீசார்.!
- லக்னோவில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரியின் குடும்பத்தை பார்க்க பிரியங்கா காந்தி சென்றார்.
- அப்போது போலீசார் அனுமதிக்காததால் கட்சி நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து எஸ்.ஆர்.தாராபுரியின் குடும்பத்தினரை சந்தித்தார்.
குடியுரிமை திருத்த மசோதா இரண்டு மோசோதாவிலும் நிறைவேற்றப்பட்டது. இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் , குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் , பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சார்பிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல இடங்களில் போராட்டம் வலுவடைந்து வன்முறை வரை சென்று உள்ளது . இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும் , புகை குண்டு வீசியும் கலைத்தனர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (வயது 76) கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரியை சந்திக்க நேற்று முன்தினம் பிரியங்காவை காரில் சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா காந்தி காரில் இருந்து இறங்கி எஸ்.ஆர். தாராபுரியின் வீட்டிற்கு நடந்து சென்றார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதன் காரணமாக போலீசாரால் பிரியங்கா காந்தியை பின் தொடர முடியவில்லை.
பின்னர் பிரியங்கா காந்தி கட்சி நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து எஸ்.ஆர்.தாராபுரியின் குடும்பத்தினரை சந்தித்தார். பிரியங்கா காந்தியும், இருசக்கர வாகனம் ஒட்டிய கட்சி நிர்வாகியும் தலைக்கவசம் அணியவில்லை.
இந்நிலையில் லக்னோ காவல்துறை ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இருசக்கர வாகனம் ஒட்டிய கட்சி நிர்வாகி மற்றும் பிரியங்கா காந்திக்கு ரூ.6,100 அபராதம் விதித்தது.