ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்தார். எனவே இந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற நேற்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்ற நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.இதன் பின்னர் ராகுல் மற்றும் பிரியங்கா இருவரையும் போலீசார் கைது செய்து விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டு பின்னர் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது உத்தரப்பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 188, 269 மற்றும் 270 பிரிவுகள் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024