அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா மற்றும் 6 உயரதிகாரிகள் மீது மிசோரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கிடையே சமீப நாட்களாக எல்லைப் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இந்த பிரச்சினை கடந்த 26-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதில் இரு மாநிலத்தை சேர்ந்த மக்களும், காவல்துறையினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் அசாம் காவல்துறையினர் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து உள்துறை அமைச்சர் அவர்கள் இரு மாநில முதல்வர்களிடமும் தொலைபேசியில் பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். நிலைமை சீராகி உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஹிமந்தா பிஸ்வாவும் மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தாங்காவும் வெளிப்படையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டிய நிலையில் அசாம் முதலமைச்சர், அசாம் ஐஜி அனுராக் அகர்வால், கச்சார் டிஐஜி தேவ்ஜோதி முகர்தி, கச்சார் எஸ்பி சந்திரகாந்த் நிம்பல்கர், டோலை காவல் நிலையப் பொறுப்பாளர் சனாப் உதின் ஆகியோர் மீது மிசோரம் போலீசார் கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…