கொரோனா தொற்றால் உயிரிழந்த போலீஸ் – அதிர்ச்சியில் உயிரிழந்த மகள்!
தந்தை இறந்த அதிர்ச்சியில் உயிரிழந்த மகள், சோகத்தை ஏற்படுத்திய பஞ்சாப் நிகழ்வு.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. 20 லட்சத்தை தொட்டு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அமைச்சர்கள் அரசியல்வாதிகள் நடிகர்கள் என பலரும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள போலீஸ் ஏ.எஸ்.ஐ.ஜஸ்பால் சிங் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்பொழுது உயிரிழந்துள்ளார்.
49 வயதான இவருக்கு முழு மரியாதையுடன் தகனம் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் 24 வயது கொண்ட மகள் நவ்பிரீத்தி என்பவர் தந்தை இறந்த அதிர்ச்சியில் அவரும் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது மகள் நவ்பரீத்தி இறப்பதற்கு முன்பாக டாடிஜி டாடி ஜி என்று அழைத்துக் கொண்டே இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த காவலருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்ததாகவும் அதேசமயம் அவரது உயிரிழந்த மகள்ளுக்கு இளம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் என்பதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.