டெல்லி முதல்வர் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம்.! தண்ணீர் பீய்ச்சியடித்து கூட்டம் கலைப்பு.!
டெல்லி முதல்வர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் கலைத்தனர்.
டெல்லியில் அண்மையில், கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை கண்டித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு முன்பு ஏராளமான பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி போலீசார் களைந்து செல்ல கூறினார். பின்னர் போராட்டக்காரர்ளை கட்டுப்படுத்த தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்.
குற்றம் செய்த கவுன்சிலர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சஸ்பெண்ட் செய்யாத வரை போராட்டம் தொடரும் என பாஜக எம்பி பர்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்துள்ளார்.