பாஜக தொண்டர்களை கலைக்க போலீசார் லத்தி சார்ஜ்..!
ஹவுரா பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜக தொண்டர்களை கலைக்க போலீசார் தண்ணீர் மற்றும் லத்தி சார்ஜ் செய்தனர்.
மேற்கு வங்கத்தில், பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாநிலம் தழுவிய “நபன்னா சாலோ” போராட்ட அணிவகுப்பைத் நடத்தினர். நான்கு பேரணிகளில் மூன்று வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் மட்டும் நடைபெற்றது. மீதி ஓன்று ஹவுரா பாலத்தில் நடைபெற்றது.
இந்த அணிவகுப்பின் போது பாஜக தொண்டர்கள் பெருமளவில் கூடியதால் காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதனால், பாஜக தொண்டர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஹவுராவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் சாலையில் பல டயர்களுக்கு தீ வைத்துள்ளனர். இதனால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் அடித்தனர். பாஜகவின் இந்த ஆர்ப்பாட்டத்தை கருத்தில் கொண்டு, கட்சி தலைமையகத்திற்கு வெளியே கடும் போலீஸ் படை நிறுத்தப்பட்டது.