லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் – இணையத்தில் வைரலாகிய வீடியோ!
இளம்பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியதையடுத்து அவர் மீது தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே எனும் மாவட்டத்தில் பெண் காவல் அதிகாரி ஒருவர் இளம்பெண் ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லஞ்சம் வாங்குவது தவறு என கூறினாலும், இன்னும் இந்தியாவில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் சரி, லஞ்சம் கொடுக்கும் பணம் படைத்தவர்களும் சரி திருந்தியபாடில்லை.
தற்பொழுது மஹாராஷ்டிராவில் சாலையோரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் போலீஸ் அதிகாரி மறைமுகமாக லஞ்சம் வாங்கியதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகியதை அடுத்து அந்த பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.