ராஜஸ்தான் : வேகமாக மோட்டார் சைக்கிளில் கட்டியணைத்து ரோமன்ஸ் செய்துகொண்டு சென்ற காதல் ஜோடியை காவல்துறை கைது செய்தது.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி எதாவது வீடியோ வைரலாவது வழக்கம். அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் காதல் ஜோடி ஒன்றும் அதிகமான வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
அவர்கள் இருவரும், பூந்தி சாலை மூலிகைத் தோட்டத்திற்கு அருகில் உள்ள சாலையில், ஜோடி கட்டிப்பிடித்துக்கொண்டு பைக்கில் சென்று இருந்த சமயத்தில் பின்பு வந்த ஒருவர் அதனை வீடியோவாக பதிவு செய்தார். அந்த பெண் பைக்கின் பெட்ரோல் டேங்கில் அபாயத்தை உணராமல் காதலரை கட்டியணைத்து அமர்ந்து கொண்டு சென்றார்.
அவர்ளுடன் பின்னாடியே வந்தவர்கள் வீடியோ எடுப்பது தெரிந்தும் கூட இருவரும் காதல் மயக்கத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தும் சென்றார்கள். உடனடியாக வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஒருவர் ‘இந்த வீடியோ கொட்டாவை சேர்ந்தது’ என்று பதிவிட்டு இருந்தார்.
உடனடியாக அந்த வீடியோவை பார்த்த கொட்டா காவல்துறையினர் “இந்த வைரல் வீடியோவின் பின்னணியில், IPC பிரிவு 294A இன் கீழ் வழக்கு எண் 122/24 பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பைக்குடன் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறியிருந்தது.
அதனை தொடர்ந்து, அவர்கள் மன்னிப்பு கேட்க வைத்து காவல்துறையினர் வீடியோவை பதிவு செய்து இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளனர். வீடியோவில் மன்னிப்பு கேட்ட காதல் ஜோடி ” இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம். நாங்கள் மோட்டார் சைக்கிளில் அப்படி சென்றதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக இதுபோன்ற செயல்களை பொது இடங்களில் செய்ய வேண்டாம். இதுபோன்ற செயல்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றும் கூறியுள்ளனர்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட்…