வங்காளத்தில் பழிவாங்கும் கொலை சம்பவத்தில் தப்பிய குடும்பத்தாரை கைது செய்த போலீசார்!

Default Image

வங்காளத்தில் பழிவாங்கும் கொலை சம்பவத்தில் தப்பிய குடும்பத்தாரை கைது செய்த போலீசார்.

வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 15 வயதுடைய சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியின் காதலன் மீது சந்தேகம் கொண்ட கொண்டு, சிறுமியின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள் சிறுமியின் காதலனை பழிவாங்கும் வண்ணம் கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை, ஃபிரோஸ் ஆலமின் உடல் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மிதந்தது, அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சிறுமியின் குடும்பத்தினரால் கடத்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறி, சோப்ரா காவல் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், வடக்கு டினாஜ்பூரில் உள்ள இஸ்லாம்பூரின் சோனார்பூர் பகுதியில் இருந்து சிறுமியின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் மீது கொலை குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்