டெல்லியில் போதைப்பொருள் விற்ற இரண்டு நேபாள நாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில், குர்கான் மற்றும் நொய்டாவின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் சப்ளை செய்யப்படுவதாகவும், இவர்கள் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருவதாகவும் டெல்லி குற்றப்பிரிவு போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் போதைப்பொருள் சாம்பலை செய்த நீரஜ் மற்றும் சிவா என்ற இரண்டு நேபாள நாட்டினரை கைது செய்துள்ளனர்.
இவர்களது வாடகை வீட்டில் இருந்து, பல லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் 2018 ல் வேலை தேடி டெல்லிக்கு வந்ததாக தெரிவித்தனர். ஆரம்பத்தில், அவர்கள் பல ஹோட்டல்களில் பணிபுரிந்தனர், ஆனால் இறுதியாக டெல்லியின் சாகேத் பகுதியில் குடியேறினர். காலப்போக்கில் 2019-ல் அவர்களுக்கு தெரிந்த நேபாளி நாட்டினர் ஒருவர் மூலமாக, தனிநபர்களுக்கு ஹஷிஷ் விற்கத் தொடங்கி உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…