காதலனுக்கு விஷம்… காதலி கிரிஷ்மாவுக்கு மரண தண்டனை!

நாட்டையே உலுக்கிய ஷாரோன் என்ற இளைஞரை காதலி கிரிஷ்மா ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த விவகாரத்தில் குற்றவாளி கிரிஷ்மாவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Sharon Raj Case

கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ்  என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா  கடந்த 2022-ஆம் ஆண்டு  குளிர் பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.  இருவரும் காதலித்து கொண்டு இருந்த சமயத்தில் கிரிஷ்மா வீட்டில் அவருக்கு வேறொரு மாப்பிளை பார்த்துள்ளனர். அதற்கு கிரீஷ்மாவும் சம்மதம் தெரிவிக்க காதலித்து வந்த ஷாரோன் ராஜ்   இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எனவே, ஷாரோன் ராஜை தீர்த்து காட்டினாள் தான் நம் கல்யாணம் நடக்கும் என்ற நோக்கத்தோடு கடந்த 2022 அக்டோபர் 14 ஆம் தேதி ஷாரோன் ராஜை சமாதானம் செய்ய முடிவு செய்வதுபோல அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். தன்னுடைய காதலி அழைத்தவுடன் நம்பி வீட்டிற்கு சென்ற ஷாரோன் ராஜிற்கு குளிர்பானத்தில் கிரிஷ்மா விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

குளிர்பானத்தை குடித்த பிறகு விஷம் வேலையை காட்ட தொடங்கிய நிலையில் கடும் வயிற்று வலியால் துடித்தார். அதன்பிறகு அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மருத்துவர்கள் கொண்டு  சென்றார்கள். ஆனால், அக்டோபர் 25ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி ஷரோன் ராஜ் உயிரிழந்தார். இதனையடுத்து, பரிசோசோதனையில் அவர் விஷயம் அருந்தியது தெரியவந்தது.

இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறை கிரிஷ்மாவை கைது செய்தனர். கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தன்னுடைய திருமணத்தை தடுத்துவிடுவார் என்ற அச்சத்தில் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலமும் அளித்தார்.

அதனைத்தொடர்ந்து  கிரிஷ்மாவும், அவரின் தாய்மாமனும் இந்த வழக்கில் குற்றவாளிகள் எனவும், கிரிஷ்மாவின் தாயார் சிந்துவுக்கு எதிராக சரியான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் விடுவிக்கப்படுவதாகவும், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றிய விவரங்கள் ஜனவரி 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நெய்யாட்டின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், தற்போது காதலனுக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி கிரிஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக கேரள நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்த தாய் மாமன் நிர்மலுக்கு 3 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்