பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரனுடன் முக்கியப் பேச்சுவார்த்தை
இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வந்துள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரன் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
நான்கு நாள் அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரன் இந்தியா வந்துள்ளார். மனைவி பிரிஜட் மேரி கிளாடி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவுடன் நேற்று இரவு டெல்லி வந்த அவரை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.
பிரதமர் மோடி – பிரான்ஸ் அதிபர் மேக்ரன் இடையே இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில், கடலோர பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டவுன்ஹால் வளாகத்தில் இன்று 300 மாணவர்களுடன் பிரான்ஸ் அதிபர் கலந்துரையாடுகிறார். இரு நாடுகளைச் சேர்ந்த கல்வித்துறை வல்லுனர்கள் மத்தியிலும் மேக்ரன் இன்று கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை தாஜ்மகாலை கண்டு ரசிக்கவும், திங்கட்கிழமையன்று வாரணாசியை பிரதமர் மோடியுடன் சேர்ந்து சுற்றிப்பார்க்கவும் மாக்ரான் ஆர்வம் கொண்டுள்ளார்.
இதனிடையே, பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று இரவு அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.