#PMCares:பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவிகள் – இன்று வழங்கும் பிரதமர் மோடி!

Default Image

பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான உதவிகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.

நாடு முழுவதும் கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்காக PM CARES திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 30, 2022) காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் உதவிகளை வழங்குகிறார்.இந்நிகழ்ச்சியில் அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள்,எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்கள்.மேலும்,இது தொடர்பாக,பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“மே 30 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு,குழந்தைகளுக்கான PM CARES திட்டத்தின் கீழ் பலன்கள் வெளியிடப்படும்.இந்த முயற்சியின் மூலம், கொரோனாவில் பெற்றோரை இழந்தவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்த நிகழ்ச்சியில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான PM CARES பாஸ்புக் மற்றும் ஹெல்த் கார்டுகளும் வழங்கப்படவுள்ளது.

குழந்தைகளுக்கான ‘PM CARES’ திட்டம் என்றால் என்ன?

கடந்த மார்ச் 11, 2020 முதல் பிப்ரவரி 8, 2022 வரையிலான காலகட்டத்தில், கொரோனா தொற்று நோயால் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது வளர்ப்பு பெற்றோர் அல்லது எஞ்சியிருக்கும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக,குழந்தைகளுக்கான PM CARES திட்டம் கடந்த மே 29, 2021 அன்று தொடங்கப்பட்டது.

குழந்தைகளுக்கான PM CARES திட்டத்தின் நோக்கம் என்ன?

23 வயதை எட்டியவுடன் ரூ.10 லட்சம் நிதியுதவியுடன்,கல்வி மற்றும் கல்வி உதவித்தொகை மூலம் குழந்தைகளை மேம்படுத்தி,அவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதன் மூலம்,குழந்தைகளின் விரிவான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டம் அவர்களின் நலனை மருத்துவ காப்பீடு மூலம் உறுதி செய்கிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்