6.1 லட்சம் பயனாளிகளுக்கு, ரூ.2,691 கோடி நிதியுதவியை விடுவிக்கிறார் பிரதமர் மோடி
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ரூ.2,691 கோடி நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12 மணியளவில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில் விடுவிக்க உள்ளார்.
கிராமப்புறங்களுக்கான, பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ஏற்கனவே, முதல் தவணைத் தொகையை பெற்ற 80 ஆயிரம் பயனாளிகளுக்கான இரண்டாவது தவணைத் தொகை, 5.30 லட்சம் பயனாளிகளுக்கான முதல் தவணைத் தொகை ஆகியவை, தற்போது விடுவிக்க உள்ள நிதியுதவியில் அடங்கும்.
கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6.1 லட்சம் பயனாளிகளுக்கு, ரூ.2,691 கோடி நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12 மணியளவில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில் விடுவிக்க உள்ளார். மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உத்தரபிரதேச முதலமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.