ஜம்மு காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை இன்று மதியம் 12 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் இத்திட்டம் வழங்குவதோடு, நிதி ஆபத்தில் இருந்து மக்களைக் காத்து, அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது என்று மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டை இத்திட்டம் வழங்குகிறது.ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையில் காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது.கூடுதலாக சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்படுகிறது. பிரதமர்-ஜெய்யுடன் இணைந்து செயல்பட உள்ள இத்திட்டத்தின் பலன்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறலாம். பிரதமர்-ஜெய்யுடன் இணைந்துள்ள அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் சிகிச்சை பெறலாம்.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…