குஜராத் உயர் நீதிமன்ற வைரவிழா – பிரதமர் நரேந்திர மோடி உரை

குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சியில் இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்ற உள்ளார். குஜராத் உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டு 60 வருடங்கள் ஆனதை குறிக்கும் விதமாக தபால் தலை ஒன்றையும் பிரதமர் வெளியிடுகிறார்.
மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர், உச்ச நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள், குஜராத் முதலமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.குஜராத் சட்டத்துறையை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.