பிரதமர் பெருமிதம் : ஜல் ஜீவன் திட்டம் மூலம் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு!

Published by
Rebekal

ஜல் ஜீவன் திட்டம் மூலம் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி தொடங்கிய திட்டம் தான் ஜல் ஜீவன். இந்த ஜல் ஜீவன் திட்டத்தின் ஒரு பகுதியான கிராம பஞ்சாயத்து மற்றும் கிராம குடிநீர் மற்றும் துப்புரவு குழுவுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜல் ஜீவன் திட்டத்தின்  மூலம் மக்களுக்கு குடிநீர் மட்டும் கிடைக்கவில்லை, கிராமங்கள் மற்றும் பெண்கள் என அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும், சுதந்திரம் பெற்றதிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை நாட்டில் மூன்று கோடி வீடுகளுக்கு தான் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டத்தின் மூலமாக இதுவரை 1.25 லட்சம் கிராமங்களில் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று நம் நாட்டில் 80 மாவட்டங்களில் 1.25 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கிடைத்து உள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை, நாங்கள் இரண்டு ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம் எனவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் ஜல் ஜீவன் இயக்கத்தின் செயலியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

Recent Posts

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

10 minutes ago

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

43 minutes ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

2 hours ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

2 hours ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

2 hours ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

10 hours ago