உலகின் மிக நீளமான 9 கி.மீ குகைவழிப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
பனிக்காலத்தில் கடுமையாக ஏற்படக்கூடிய பணி சரிவால் இமாசலப் பிரதேசத்திலுள்ள மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு வரைக்கும் பனியால் மூடப்பட்டு காணப்படும். இதனால் ஆறுமாதங்களுக்கு அப்பகுதியில் யாரும் போக்குவரத்து வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வாஜ்பாய் அரசு முடிவில் கட்டத் தொடங்கப்பட்ட ரேத்தங் சுரங்கப்பாதை வாஜ்பாய் நினைவாக அடல் சுரங்கப்பாதை என கடந்த டிசம்பர் மாதத்தில் பிரதமர் மோடி அவர்களால் முடிவு செய்யப்பட்டு தொடர்ந்து சுரங்கப்பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த சுரங்கப்பாதை பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ள நிலையில், உலகிலேயே மிக நீளமான 9.2 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள இந்த அடல் சுரங்கப்பாதையை எந்த ஒரு பனி, மழை, வெயில் காலங்களிலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை இன்று பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிப்பதால் மணாலி – லே இடையிலான தூரம் 46 கிலோமீட்டர் குறையும் எனவும், பயண நேரம் 5 மணி நேரம் குறையும் எனவும், இது கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…